ETV Bharat / bharat

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம்; ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - விசாரணைக்கு உத்தரவிட்ட உள்துறை அமைச்சகம்!

Parliament security breach: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தொடர்பாக, ஊபா சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையின் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Dec 14, 2023, 8:58 AM IST

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 10வது நாளான நேற்று (டிச.13) நடைபெற்ற பூஜ்ஜிய நேரத்தில், மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் திடீரென குதித்தனர். மேலும், அவர்கள் இருவரும் உறுப்பினர்களின் மேசை மீது தாவி ஓடினர். அது மட்டுமல்லாது, அவர்கள் கையில் வைத்திருந்த குப்பியில் இருந்து மஞ்சள் நிற வாயுவும் வெளிவந்தது. மேலும், அவர்கள் கோஷமும் எழுப்பினர்.

இதனை சற்றும் எதிர்பாராத உறுப்பினர்கள், அவர்கள் இருவரையும் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்ற வளாகத்தில் பெண் உள்பட இருவர் நிறங்கள் கொண்ட வாயுவை வெளியேற்றியது மட்டுமல்லாமல், கோஷங்களையும் எழுப்பினர். பின்னர் அவர்களையும் காவல் துறையினர் பிடித்தனர்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “அவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்த இருவர், தங்கள் கைகளில் குப்பிகளை வைத்திருந்தனர். பின்னர், அதில் இருந்து மஞ்சள் நிற கேஸ் வெளியானது. இது மக்களவையின் பாதுகாப்பு மீறல் ஆகும். எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். இதன்படி, மக்களவை பொதுச் செயலாளர், இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.

இதன் அடிப்படையில், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் ஜெனரல் இயக்குனர் அனிஷ் தயால் சிங் தலைமையிலான விசாரணை கமிட்டி உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் மற்ற பாதுகாப்பு முகமைகள் மற்றும் வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • On request from Lok Sabha Secretariat, MHA has ordered an Enquiry of parliament security breach incident. An Enquiry Committee has been set up under Shri Anish Dayal Singh, DG, CRPF, with members from other security agencies and experts. (1/2)@HMOIndia @PIB_India @DDNewslive

    — Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) December 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இந்த விசாரணை கமிட்டி, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மீறலுக்கான காரணம், எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விசாரணை மேற்கொள்ளும். அதேபோல், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும், இந்த விசாரணை கமிட்டி பரிந்துரை செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

இதையும் படிங்க: "நாடாளுமன்றம் பாதுகாப்பாக இல்லை" - பாஸ் வழங்கிய பாஜக எம்.பியை விசாரிக்க வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.