ETV Bharat / bharat

நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி கைது - சோட்டா ராஜனின் கூட்டாளி பூபேந்திரா

உத்தரகாண்டில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி பூபேந்திரா கைது செய்யப்பட்டார்.

Delhi police arrest underworld don Chhota Rajan's aide from Uttarakhand jail

author img

By

Published : Feb 7, 2023, 7:59 PM IST

ஹல்த்வானி: உத்தரகாண்ட் மாநிலத்தில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் நெருங்கிய கூட்டாளியான பூப்பி என்ற பூபேந்திரா டெல்லி போலீசாரால் இன்று (பிப்.7) கைது செய்யப்பட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டார்.

இதுகுறித்து டெல்லி போலீசார் தரப்பில், சோட்டா ராஜனின் நெருங்கிய கூட்டாளியான பூப்பி என்ற பூபேந்திரா பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த நௌஷாத் அலியுடன் சேர்ந்து 2020ஆம் ஆண்டு கள்ள நோட்டு மோசடியில் ஈடுபட்டார்.

  • Special cell of Delhi police arrested a criminal namely Bhupendra from Haldwani jail, Uttarakhand who is an accused in fake currency case. He is an accomplice of gangster Bunty & related to underworld don Chhota Rajan. He was presented in court & sent to 4-day police custody

    — ANI (@ANI) February 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த சம்பவத்துக்குப்பின் இருவரும் தலைமறைவான நிலையில், கடந்த மாதம் டெல்லியில் நௌஷாத் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு கூட்டாளியான ஜக்கா என்ற ஜக்ஜித் சிங் கைது செய்யப்பட்டார்.

அதோடு மூவரும் நேபாளம் வழியாக பாகிஸ்தானுக்கு செல்ல முயன்றது தெரியவந்தது. இதனால், இந்தியாவில் இருந்து நோபாளம் செல்ல கூடிய உத்தரப் பிரசேதம், பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களில் தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் பூபேந்திரா உத்தரகாண்டில் உள்ள ஹல்த்வானி சிறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உடனே அங்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்து, டெல்லிக்கு அழைத்துவந்தனர். இன்று (பிப். 7) டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 4 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ரூ.1 கோடி கம்பெனி பணத்துடன் மாயமான ஊழியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.