நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது.
நகரின் பல முக்கிய இடங்கள் புகை மண்டலங்களாக காட்சியளிக்கின்றன. இதனால் பகல் நேரங்களிலேயே வாகனங்களில் விளக்குகளை எரியவிட்டபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லி மக்கள் பலர் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற சுற்றுப்புறத் தூய்மை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில், துணை முதலமைச்சர் மணீஷ் சிஸோடியா இன்று (நவ.14) கலந்து கொண்டார்.
மேலும் அங்கு நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம், சைக்கிள் பயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் மணீஷ் சிஸோடியா பேசுகையில், "காற்று மாசை குறைக்கும் வகையில் அலுவலகத்துக்கு செல்வோர் மாதம் ஒருநாளாவது சைக்கிளில் செல்ல வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம்: ரூ.700 கோடியை வங்கிக் கணக்கில் போட்ட பிரதமர்