காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்(திருவனந்தபுரம்) சசி தரூரை சுனந்தா புஷ்கர் கொலை வழக்கிலிருந்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று (ஆக.18) விடுவித்துள்ளது.
கொலை வழக்கில் சசி தரூர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று நீதிபதி கீதாஞ்சலி கோயல் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு
சசி தரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள சொகுசு விடுதியில் 2014ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த விசாரணையில், கணவர் சசி தரூர் மீது வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் பிணையில் இருந்துவந்த சசி தரூர், அவர் மீதான குற்றச்சாட்டில் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை என்று கூறி நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டார்.
சசி தரூர் நன்றி
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு தொடர்பாக சசி தரூர், "கடந்த ஏழாரை ஆண்டுகள் எனக்கு பெரும் சித்தரவதையாக இருந்தது, இந்த தீர்ப்பு எனக்கு நிம்மதியை தருகிறது” எனக் கூறி நீதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், சசி தரூர் தனது சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கிறஞர்கள் விகாஸ் பஹ்வா, கௌரவ் குப்தா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு குறித்த அமைச்சரவைக் கூட்டம்