ETV Bharat / bharat

டெல்லியில் 60% பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திகொண்டதாக தெரிவித்திருந்த நிலையில், டெல்லி மருத்துவ சங்க செயளாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 60 சதவீதம் பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

கோவிட் தடுப்பூசி
கோவிட் தடுப்பூசி
author img

By

Published : Dec 26, 2021, 6:49 AM IST

புது டெல்லி: தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லி மருத்துவ சங்கத்தின் செயலாளர் Dr. அஜய் காம்பீர் வெளியிட்டுள்ள அறிக்கை முதலமைச்சரின் கூற்றுக்கு முரணாக அமைந்துள்ளது. அவரது தகவலின்படி 60 சதவீதம் பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

அதிர்ச்சியூட்டும் தகவல்

மேலும் அவர் கூறுகையில், "பணிக்குழு கூட்டத்தில் புள்ளிவிவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டபோது, ​​அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரிய வந்தன. தடுப்பூசி தொடர்பாக மூன்று நிலைகளில் இடைவெளி காணப்பட்டது. முதலில் பிராந்திய அளவில், மற்றொன்று மைக்ரோ அளவில். மூன்றாவதாக பாலின அளவில்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைய பெண்களில் 60 சதவீதம் பேர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை. இவர்களில் கர்ப்பமானவர்களும், குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும் அடங்குவர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை வரக்கூடும் என்கிற பொய்யான தகவல்களை நினைத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் பலர் இருக்கின்றனர்.

முற்றிலும் பாதுகாப்பான தடுப்பூசி

மக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. யாருக்கும் எந்த விதமான தீங்கும் ஏற்படாது. மேலும், மகப்பேறு வல்லுநர்கள், தங்களிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” எனக் கூறினார்.

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: Vaccination for children: ஜனவரி 3-ம் தேதி முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி - பிரதமர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.