ETV Bharat / bharat

ரூ.43 ஆயிரம் கோடி மதிப்பில் ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுவதற்கு டெண்டர் கோர அனுமதி!

உத்தி கூட்டுறவு மாதிரி திட்டத்தின் கீழ், சுமார் ரூ.43 ஆயிரம் கோடி மதிப்பில் ஆறு நீர்மூழ்கி கப்பல்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதற்குப் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இன்று (ஜூன்.4) ஒப்புதல் அளித்துள்ளது.

Breaking News
author img

By

Published : Jun 4, 2021, 7:28 PM IST

டெல்லி: ரூ.43,000 கோடி மதிப்பில் ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோர (Request for Proposal), பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று(ஜூன்.4) நடைப்பெற்றது. இதில் பாதுகாப்பு படைகளின் நவீனமயமாக்கம் மற்றும் செயல்பாடு தேவைகளுக்கு, சுமார் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பில், பல்வேறு சாதனங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உத்தி கூட்டுறவு மாதிரி திட்டத்தின்(strategic partnership model) கீழ், ஆறு நீர்மூழ்கி கப்பல்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (Defence Acquisition Council ) ஒப்புதல் அளித்தது.

இத்திட்டம், சுமார் ரூ.43,000 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் ஆறு நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டில் கட்டுவதற்கு வழிவகுக்கும். உத்தி கூட்டுறவு மாதிரியின் கீழ், மேற்கொள்ளப்படும் முதல் முக்கியமான ஒப்புதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. மிகப் பெரிய மேக் இன் இந்தியா திட்டங்களில், இதுவும் ஒன்றாக இருக்கும்.

தொழில்நுட்பத்தை விரைவாக பெறுவதற்கும், இந்தியாவில் நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான தொழில் சூழல் அமைப்பை உருவாக்கவும், இது உதவும். இது இறக்குமதியை குறைத்து, தற்சார்பு நிலையை உறுதி செய்யும்.

வான் பாதுகாப்பு ஆயுதங்களை நவீனப்படுத்த வேண்டும் என, இந்திய ராணுவம் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்துவருகிறது. முன்பு, இவை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன. அனைத்து வகை ஆயுதங்களையும், உள்நாட்டில் தயாரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் வலியுறுத்தி வருவதால், இத்தகைய ஆயுதங்களை இந்தியாவில் தயாரிக்கப் பல இந்திய நிறுவனங்கள் முன்வந்தன.

இதன் காரணமாக, ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பில் வான் பாதுகாப்பு ஆயுதங்களை, இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்புதலைப் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் வழங்கியது. உதிரி பாகங்களை வாங்கி தயாரிக்கும் பிரிவின் கீழ், இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் தயாரிக்கப்படவுள்ளன.

செயல்பாடு சவால்களை எதிர்கொள்வதற்கு, பாதுகாப்பு படைகளை தயார்படுத்தவும், தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை விரைவில் சேர்க்கவும், அவசர மூலதன கொள்முதலுக்கான கால வரம்பைப் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் நீட்டித்துள்ளது.

இதன் மூலம் பாதுகாப்பு படைகள் தங்களின் அவசர மற்றும் முக்கியமான கொள்முதல்களை நிறைவு செய்ய முடியும். இத்திட்டத்திற்காக, இரண்டு இந்திய நிறுவனங்கள், ஐந்து வெளிநாட்டு தயாரிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், இரண்டு இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு தயாரிப்பாளர்களுடன் இணைந்து, இத்திட்டத்தை மேற்கொள்வதற்கான அனுமதி இறுதி செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.