பாட்னா: பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் இன்று(நவ.4) கள்ளச்சாராயம் குடித்த 25 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். அதில், 9 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் மருந்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். காவல்துறையின் முதல் கட்ட தகவலில், கள்ளச்சாராயம் குடித்ததில் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் பார்வை இழந்துள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்தனர். பிகாரில் அடிக்கடி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டாசு வெடித்ததில் தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழப்பு - தீபாவளியில் சோகம்