காந்திநகர்: குஜராத் மாநிலம் பொடாட் மாவட்டத்தில் ஜூலை 25ஆம் தேதி போலி மதுபானம் குடித்த 60-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவு காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 57 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இன்னும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மதுபானத்தை விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விசாரணையில், மெத்தனால் கலந்த மதுபானத்தை விற்பனை செய்ததால் உயிரிழப்புகள் நடத்திருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் குஜராத் உள்துறை அமைச்சரம், பொடாட் , அகமதாபாத் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு காவல்துறை கண்காணிப்பாளர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதோடு 5 காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்வு