ETV Bharat / bharat

பான் - ஆதார் இணைப்பு: வருமான வரித்துறை வார்னிங்!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை வரும் 2023, மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்காத பான் எண்ணை பயன்படுத்த முடியாது என்றும் வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பான் கார்டு எண்ணுடன் ஆதாரை இணைக்க காலக்கெடு!

author img

By

Published : Dec 26, 2022, 9:38 AM IST

டெல்லி: இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வருமான வரிச் சட்டம் 1961இன் படி, விலக்கு பெறாத அனைத்து பான் கார்டு வைத்திருப்பவர்களும் 31.3.2023க்கு முன்னர், ஆதாருடன் தங்கள் பான் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். 1.04.2023 முதல் ஆதார் உடன் இணைக்கப்படாத பான் கார்டை பயன்படுத்த முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • As per Income-tax Act, 1961, it is mandatory for all PAN holders, who do not fall under the exempt category, to link their PAN with Aadhaar before 31.3.2023.
    From 1.04.2023, the unlinked PAN shall become inoperative.
    What is mandatory, is necessary. Don’t delay, link it today! pic.twitter.com/eJmWNghXW6

    — Income Tax India (@IncomeTaxIndia) December 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஏற்கனவே வருமான வரி செலுத்துவதற்கான பான் கார்டு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அஸ்ஸாம், காஷ்மீர், மேகாலயா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வருமான வரிச்சட்டம் 1961இன் படி வீடு இல்லாதவர்கள், 80 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள், இந்தியர் அல்லாதவர்கள் போன்ற பிரிவினர் இதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் ஆவர்.

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் பான் எண் காலாவதியாகிவிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பான் கார்டு செயலற்றதாகிவிட்டால், வருமான வரிச்சட்டத்தின் அனைத்து விளைவுகளுக்கும் அந்த தனிநபர் பொறுப்பாவதுடன், பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.