ETV Bharat / bharat

இந்தியா வருமா மாணவரின் உடல்? - வைரலாகும் நண்பர்கள் அனுப்பிய வீடியோ - கார்கீவ்

உக்ரைனில் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் நேற்று (மார்ச் 1) உயிரிழந்தை அடுத்து, அங்கு மருத்துவமனை ஒன்றில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் காணொலி தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா வருமா மாணவரின் உடல்
இந்தியா வருமா மாணவரின் உடல்
author img

By

Published : Mar 2, 2022, 4:58 PM IST

Updated : Mar 2, 2022, 5:32 PM IST

ஹவேரி (கர்நாடகா): உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை (பிப். 24) போரை தொடங்கியது. தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், ஏழாம் நாளான இன்றும் (மார்ச் 2) நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.

முன்னதாக, உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ்வில் நேற்று (மார்ச் 1) நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின்போது, இந்திய மாணவர் நவீன் சேகரப்பா (22) உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த மாணவர் கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் கார்கீவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழக்கத்தில் நான்காம் ஆண்டு, மருத்துவப் படிப்பு பயின்று வந்ததும் தெரியவந்தது.

உயிரிழந்த மாணவர் நவீன் சேகரப்பா
உயிரிழந்த மாணவர் நவீன் சேகரப்பா

இந்நிலையில், நவீனின் உடல் அடையாளம் காணப்பட்டு, அங்குள்ள மருத்துவமனை நிர்வாகம் அதனை காணொலியாக பதிவுசெய்து உக்ரைனில் சிக்கியுள்ள அவரின் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளது.

அந்த காணொலியை நண்பர்கள், நவீனின் குடும்பத்தினருக்கும் அனுப்பியுள்ளனர். மருத்துவமனையில் உடல்களோடு உடலாக நவீனின் உடலும் குவிக்கப்பட்டுள்ளது காணும்போது, அவரின் உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.

வைரலாகும் காணொலி

மோசமாகும் உக்ரைன் நிலவரம்

இதையடுத்து, இந்திய தூதரகத்தின் இணை இயக்குநரான நிமேஷ் பானோட், நவீனின் சகோதரர் ஹர்ஷாவை இன்று தொடர்புகொண்டு, உக்ரைன் நிலவரம் குறித்து உரையாடி உள்ளார். அப்போது, நவீனின் உடலை இந்தியா கொண்டு வர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் உக்ரைனில் நாளுக்கு நாள் நிலவரம் மோசமாகி வருவதாகவும் கூறியுள்ளார்.

காணொலியில் காட்டப்படும் நவீனின் உடல்
காணொலியில் காட்டப்படும் நவீனின் உடல்

மேலும், கடினமானச் சுழல் உள்ளதால்தான், உடலைக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது நவீனின் உடல் கார்கீவ்வில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'நான் பாசிஸ்ட்டா... மனது வலிக்கிறது' - மரணமடைந்த ரஷ்ய வீரர் தாயிற்கு எழுதிய குறுஞ்செய்தி

Last Updated : Mar 2, 2022, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.