மேஷம்
சமூகப் பொறுப்புகள், அலுவலகப் பணியின் காரணமாக உங்களுக்கு வேலை அதிகம் இருக்கும். இதிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு உங்களுக்கான நேரத்தைச் செலவழிக்க வேண்டும். உங்களது உடல்நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உங்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டால், அனைத்துப் பணிகளும் பாதிக்கப்படும்.
ரிஷபம்
இன்றைய நாளில், நீங்கள் பலவிதமான புதிர்களுக்கான பதிவைத் தேடுவீர்கள். மற்றவர்கள் செய்த தவறுக்காக நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதனால் ஏமாற்றம், வருத்தம் காரணமாக தன்னம்பிக்கை குறையும். உங்களது பலம் என்ன என்பதையும் பலவீனம் என்ன என்பதையும் அறிந்துகொண்டு செயல்படவும்.
மிதுனம்
உங்களது நிதி நிலைமை அல்லது சொத்துகள் குறித்த கவலை உங்களுக்கு இருக்கும். சிறிது பணம் நெருக்கடி ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சாதாரண பிரச்சினைகூட உங்கள் மனத்தைப் பாதிக்கும். நிதி விஷயங்கள் தொடர்பாக நீங்கள் சில முடிவுகளை எடுக்கக் கூடும். மனத்தை அமைதியாக வைத்துக்கொண்டு, உற்சாகமாகச் செயல்படவும்.
கடகம்
உங்களது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள, பணத்தைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் எதையேனும் மாற்ற விரும்பினால் அதையும் பணத்தைப் பயன்படுத்தி மாற்றுவீர்கள். உங்கள் பணம் வரவினால் உங்கள் அன்பிற்கு உரியவர்கள் பயனடைவார்கள். அனைத்துத் தரப்பிலிருந்தும் பணவரவு இருப்பதைப் போல, அனைத்துத் தரப்பிலிருந்தும் பண விரயமும் இருக்கும்.
சிம்மம்
சில வாக்குறுதிகள் காற்றில் பறந்துவிடும். அவை யாவும் நிறைவேறாது. அதேபோன்று இன்றைய நாளைப் பொறுத்தவரை, ஒரு விஷயத்தைச் சாதித்ததுபோல் தோன்றினாலும், அந்தப் பணி நிறைவேறாமல் இருக்கும். வெற்றி கை நழுவிப் போகும். எப்போதும் வெற்றி சாத்தியம் அல்ல என்பதை நினைவில் கொண்டு, ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும். மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.
கன்னி
உங்களது மனத்தில் பல்வேறு அறிவார்ந்த எண்ணங்கள் உதித்துக் கொண்டே இருக்கும். உங்களது அற்புதமான செயல் ஆற்றல் மூலம், அனைத்தையும் சரி செய்துவிடுவீர்கள். மற்றவர்கள் மனத்தைப் படித்து, உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.
துலாம்
நீங்கள், நெறிமுறைகளுக்கு உட்பட்டு கடுமையாக உழைக்கும் தன்மை கொண்டவராக இருப்பீர்கள். இன்று வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கும், அமைப்புசாரா பணியாளர்களுக்கும் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் உள்ளுணர்வை மதித்துச் செயல்பட்டால், தவறு ஏதும் நிகழாது. காலையில் மேற்கொண்ட கடும் உழைப்பிற்கு, மாலையில் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் செய்யும் பணியை மகிழ்ச்சியுடன் தொடர்ந்து மேற்கொள்ளவும்.
விருச்சிகம்
இன்று, உங்களது கிரக நிலைகள் மிகவும் சாதகமாக உள்ளன. குழுவாகப் பணியாற்றுவதும் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து, குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் சமமாக நடத்துவீர்கள். இதனால் பணியிட சூழல் உங்களுக்கானதாக இருக்கும்.
தனுசு
பொதுவாக நீங்கள் சுறுசுறுப்பான மனிதர்தான். ஆனால் இன்றைய நாளைப் பொறுத்தவரை நீங்கள் சோர்வாகவும் சோம்பலாகவும் உணர்வீர்கள். சமீபத்தில் வேலைப்பளு அதிகம் இருந்ததன் காரணமாக, இந்தச் சோர்வு ஏற்பட்டிருக்கக்கூடும். வேலையையும் பொறுப்பையும் பிறருக்குப் பங்கிட்டு வழங்க முயற்சி செய்யவும். எனினும் அவர்கள், நீங்கள் செய்வதைப்போல், சிறப்பாகச் செய்ய மாட்டார்கள்.
மகரம்
சில உறவுகள் குறித்து வெளிவரும் விஷயங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். அதனை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, புதிரை நீக்க முயற்சி செய்வீர்கள். உங்களது பேச்சாற்றல் காரணமாக, கருத்து வேறுபாடுகளையும் சச்சரவுகளையும் தீர்க்க உதவுவீர்கள். போட்டியாளர்களால் பாதிப்பு ஏற்படாது என்றாலும், நீங்கள் எச்சரிக்கையுடன் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.
கும்பம்
எதிர்பாராத ஒரு நிகழ்வு இன்று ஏற்படலாம். வெற்றி, பணம், காதல் உறவு ஆகிய ஏதேனும் ஒன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு கிடைக்கும். மாலையில் நீங்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடக்கூடும். அல்லது அது தொடர்பான ஆலோசனை அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள்.
மீனம்
புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். வருங்காலத்திற்கு உதவும் வகையில் கணிசமான அளவு முதலீடுகளை மேற்கொள்வீர்கள். உங்கள் குடும்பமே உங்கள் வெற்றிக்கான ஆதாரமாக இருக்கும். இதை நீங்கள் நன்றாக உணர்ந்து, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். புன்னகையின் மூலம், பல இதயங்களை வெற்றிகொள்வீர்கள்.