டெல்லி: அதி தீவிரப்புயலாக நிவர் புயல் நாளை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கவுள்ள நிலையில், தேவைப்படுவோருக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய ஆம் ஆத்மி கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
நிலமையைக் கையாள மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்கும் என நம்புவதாகத் தெரிவித்த அவர், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசத்தின் கடற்கரையோர மக்களுக்காக தான் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
வானிலை ஆய்வு மையத்தின் அண்மைத் தகவலில், நிவர் புயல் காரைக்கால், மகாபாலிபுரம் இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 120-130 கி.மீ. வேகத்திலும், சமயத்தில் 145 கி.மீ. வேகத்தில்கூட இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிவர் புயல்: பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்!