ஒடிசா மாநிலம் கட்டாக்கை தலைமையிடமாகக் கொண்ட நவோன்மேஷ் பிரசார் மாணவர் அஸ்ட்ரானமி குழுவைச் (Navonmesh Prasar Student Astronomy Team) சேர்ந்த 10 மாணவர்கள், ரோவரை தயாரித்து நாசா மனித ரோவர் சேலஞ்சில் காட்சிக்கு வைத்துள்ளனர்.
இதுகுறித்து நாப்சாட் குழுவினர் கூறுகையில், "இந்த ரோவர், முதல் பெண்ணும் அடுத்த ஆணும் நிலவிற்கு செல்லவுள்ள ஆர்ட்டெமிஸ் மிஷன் (Artemis Mission) 2024க்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோவர் பல்வேறு வகையான செவ்வாய் நிலப்பரப்புகளில் பயணிக்கும் திறன் கொண்டது. கடந்த நவம்பர் ஆறாம் தேதி இதற்கான அனுமதி கடிதம் கிடைத்தது.
கோவிட் காலத்திலும் கடந்த எட்டு மாதங்களாக, குழுவை சேர்ந்த 10 மாணவர்கள், அயராது உழைத்து வடிவமைத்துள்ளனர். நாசாவிடமிருந்து விருதை இந்தியாவுக்கு கொண்டு வருவதில், மாணவர்கள் முனைப்புடன் இருக்கின்றனர். கரோனா தொற்றால், இம்மாதம் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய பயணமும் ரத்தாகிவிட்டது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் ஒரே நாளில் 1.68 லட்சம் பேருக்கு கரோனா