மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் 8.40 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ தங்கத்தை எதியோபியாவிலிருந்து கடத்தி வந்த இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை சுங்கத் துறை அலுவலர்கள் நேற்று (அக். 14) கைது செய்தனர்.
இதுகுறித்த கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனை நடந்துள்ளது. மொத்தமாக 16 கிலோ எடையுள்ள 12 தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதனை அவர் தனது இடுப்பு பெல்டில் மறைத்து வைத்து கடத்திவந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது.