சென்னை: பொதுவாக பழங்கள் ஆரோக்கியமானவை என்பது நம் அனைவருக்கு தெரியும். நமது தினசரி நாட்களில் பழங்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பழங்கள் பல நன்மைகளை செய்கின்றது.
சீதாப்பழம்: சீதளப்பழம் அல்லது சீதாப்பழம் தென் அமெரிக்காவின், ஆண்டிஸ் மலைகளை பூர்விகமாக கொண்டதாக கூறப்படுகிறது. பொதுவாக இவை வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
சீதாப் பழம் பார்ப்பதற்கு வெளித்தோற்றத்தில் வித்தியாசமாக இருந்தாலும் அதன் உள்ளிருக்கும் சதைப்பகுதி மிகவும் இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும். சீதாபழத்திற்கு ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்று ஒரு பெயர் உண்டு. 'கஸ்டர்ட்' என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது.
சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள்
- விட்டமின் சி
- கால்சியம்
- மெக்னீசியம்
- இரும்புச்சத்து
- நியாசின்
- பொட்டாசியம்
சீதாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- சீதாப்பழத்தில் குளுக்கோஸ் உள்ளதால் அவை உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கிறது.
- நினைவாற்றலை அதிகரிக்கும்.
- உடல் எடையை குறைப்பதற்கு, குறிப்பாக தைராய்டினால் ஏற்படும் உடல் எடையை குறைப்பதற்கு சீத்தாப்பழம் பயன்படுகிறது.
- கருச்சிதைவு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுவதாலும், சிசுவின் மூளை, நரம்பு மண்டலம், எலும்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவுவதாலும் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய பழங்களில் இதுவும் ஒன்று.
- ஆஸ்துமா பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
- சீத்தப்பழத்தில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
- தோல் புற்றுநோயை அழிக்கும்.
- நீரிழிவு நோயை தடுக்கிறது.
- இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- சரும பொலிவை அதிகப்படுத்துகிறது.
- சரும வறட்சி உள்ளவர்கள் சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும்.
- மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகிவிடும்.
- ஜீரண சக்தியை அதிகரிக்கிறது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
வைட்டமின் பி : மூச்சுக்குழாயில் ஏற்படும் பாதிப்பை குறைத்து ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இரும்பு சத்து: சீதாப்பழத்தில் உள்ள இரும்பு சத்து ரத்தசோகை உள்ளவர்களிடம் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த அளவை சீராக்கும்.
மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது : சீதாப்பழத்தில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளது. இவை மூளையின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. இந்த பழம் பார்கின்சன் என்னும் மூளைக் கோளாறில் இருந்து மூளையை பாதுகாக்கிறது.
நார்ச்சத்து: செரிமான மண்டலம் சீராக இயங்க உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. அசிடிட்டி, வாய்வுக் கோளாறு போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை நெருங்க விடாமல் செய்கிறது.
மெக்னீசியம்: இதில் உள்ள மெக்னீசியம் இதய சுவர்களை வலுப்படுத்துவதால் மாரடிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
இந்த பழம் ஒரு குளிர்ச்சியான பழமாகும். இதனை எடுத்துக் கொள்வதால் உடலின் உட்புற வெப்ப நிலை குறைகிறது. இதனால் இந்த பழத்தை சாப்பிடுவதால் சளி பிடிக்கிறது என்று பொதுவாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விடிய விடிய மொபைல் ஃபோன் யூஸ் பண்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த தகவல்.!