ETV Bharat / bharat

அதானி விவகாரத்தில் ஒற்றுமை.. குடியரசு தலைவர் தீர்மானத்தில் வேற்றுமை.. எதிர்க்கட்சிகள் பிளவு.? - Opposition divided on President speech thanks

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, பாரத ராஷ்டிர சமிதி கட்சிகள் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் காரணமாக பிளவுபட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் பிளவு
எதிர்க்கட்சிகள் பிளவு
author img

By

Published : Feb 7, 2023, 9:01 PM IST

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்பதில் காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, பாரத ராஷ்டிர சமிதி கட்சிகள் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ், திமுக கட்சிகள் விவாதத்தில் பங்கேற்கவிருப்பதாக தெரிவித்துள்ளன. ஆனால், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, பாரத ராஷ்டிர சமிதி கட்சிகள் விவாதத்தை புறக்கணித்துள்ளன. முன்னதாக, திரௌபதி முர்முவின் உரையை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன.

குறிப்பாக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, குடியரசு தலைவர் உரையில் வேலையின்மை, பணவீக்கம் போன்ற வார்த்தைகள் கூட இடம்பெறவில்லை என விமர்சனம் செய்திருந்தார். அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர், முர்முவின் மொத்த உரையுமே நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார உரையாகத்தான் இருந்தது.

பாஜக அரசு செய்த அனைத்தையும் புகழ்ந்து பேசி உள்ளார் எனத் தெரிவித்திருந்தார். இருப்பினும் காங்கிரஸ் விவாதத்தை புறக்கணிக்கவில்லை. அதேபோல திரிணாமுல் காங்கிரஸ், திமுக கட்சிகளும் விவாதத்தில் பங்கேற்பதில் ஒற்றுமையாக உள்ளன. இதுகுறித்து இன்று (பிப்.7) நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புரட்சிகர சோஷலிச கட்சி எம்பி என்.கே.பிரேமசந்திரன் கூறுகையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்க பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த முடிவு, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடந்த அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்டது.

அந்த வகையில், காங்கிரஸ், திமுக, கேரள காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, இடது சாரிகள் உள்ளிட்டவை விவாதத்துக்கு ஆதரவளித்தன. சில எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்காதது உண்மைதான். அந்த கட்சிகளும் விவாதத்தில் பங்கேற்கும் என்றும் நம்புகிறோம். இந்த விவாதத்தின்போது, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் எனத் தெரிவித்தார்.

இப்படி இருக்கையில், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, பாரத ராஷ்டிர சமிதி கட்சிகள் பங்கேற்காததற்கு மற்றொரு காரணமும் உள்ளதாக அரசியல் விமசகர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, இந்த 3 கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குறைந்த மக்களவை உறுப்பினர்களை கொண்டுள்ளன. அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சிகளிடையே தங்களுக்கான வாய்ப்பு பெறுவதில் அதிருப்தி ஏற்படலாம் என்ற காரணத்தினால் விலகி இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

இதையும் படிங்க: "மோடி, அதானியின் உறவு இதுதான்" - மக்களவையில் புகைப்படங்களை காண்பித்து சம்பவம் செய்த ராகுல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.