ETV Bharat / bharat

வேட்டி அணிந்ததால் டெல்லியில் தாக்குதலுக்குள்ளான கேரள மாணவர்கள் - நீதி கேட்ட எம்.பி. - இந்திய மாணவர் கூட்டமைப்பு

டெல்லி பல்கலைக்கழகத்தில் வேட்டி அணிந்ததற்காக கேரளாவைச்சேர்ந்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கேரள எம்.பி. ஏ.ஏ. ரஹீம் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharatடெல்லி பல்கலைக் கழகத்தில் தாக்கப்பட்ட கேரள மாணவர்கள் - நீதி கேட்ட கேரள எம்பி

author img

By

Published : Nov 3, 2022, 6:05 PM IST

டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நவ-1அன்று கேரளாவைச்சேர்ந்த சில மாணவர்கள் கல்லூரிக்கு வேட்டி அணிந்து சென்றதற்காக ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். மேலும் அவர்களைத் தாக்கியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து இச்செய்தி நாடு முழுவதும் வேகமாகப்பரவியது. உடையை வைத்து மாணவர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பல தரப்பினரும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் தற்போது இந்த தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிற்கு, கேரள நாடாளுமன்ற உறுப்பினர் ஏஏ ரஹீம் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்த போதை கும்பலைச்சேர்ந்தவர்கள், வேட்டி அணிந்த மாணவர்களைக்குறிவைத்து அவர்கள் மீது இனவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை தேவைப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

மேலும் மத்திய கல்வி அமைச்சர் இந்தப்பிரச்னையில் தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.

இதற்கிடையில், SFI (இந்திய மாணவர் கூட்டமைப்பு) அமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘மாணவர்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவம் முதல் முறை இல்லை எனவும், தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் வலதுசாரி சக்திகளால் பலமுறை கல்லூரி வளாகங்களில் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். பல வெளிமாநில மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள தங்கும் விடுதிகளின் அறைகள் மறுக்கப்படுகின்றன," எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ABVP மாணவ அமைப்பினரும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.