ETV Bharat / bharat

புதுவையில் விற்பனைக்குத்  தயாராகும் மாட்டு சாண அகல் விளக்கு! - Free training for women

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் புதுவித முயற்சியாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மாட்டுச் சாணத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

cow light
cow light
author img

By

Published : Nov 7, 2020, 2:06 PM IST

தீபாவளி பண்டிகை தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த பெண்கள் மாட்டு சாணத்தில் அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர். நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. மாட்டு சாணத்தில் தயாராகும் அகல் விளக்குகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆக்ரோ டெக் ஒருங்கிணைந்த விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு, சாணத்தில் அகல் விளக்கு தயாரிக்கும் முறையை பெண்களுக்கு கற்றுத் தருகிறது. கால்நடைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், சீன விளக்குகளுக்கு மாற்றாகவும் மாட்டு சாணத்தில் அகல் விளக்கு தயாரிக்கும் பயிற்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வழங்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இந்தியாவில் ஒரு கோடி நாட்டு மாட்டு சாண விளக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், இதேபோன்று பஞ்சாப் மாநிலத்தில் கவுரி சங்கர் சேவா என்ற அமைப்பு மாட்டு சாணத்தில் அகல் விளக்குகள், கடவுள் சிலைகள் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு தயாராகும் மாட்டு சாண அகல் விளக்கு

இதையும் படிங்க: 5 மாவட்டங்களில் கன மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.