ETV Bharat / bharat

உலகின் முதல் தடுப்பூசி மருந்தாக செயல்பாட்டுக்கு வருகிறதா ’கோவிஷீல்ட்’? - கரோனா தடுப்பூசி குறித்து மருத்துவ நிபுணரின் பார்வை

”நாம் இந்த சோதனைகளின் அனைத்துக் கட்டங்களும் முடிவடைவதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றுக்கான விநியோக சங்கிலியை கவனமாக நிர்வகிக்க வேண்டும். அனைத்துக் காரணிகளையும் கொண்டு ஆராய்ந்தால், இந்தத் தடுப்பூசி மருந்து 2021ஆம் ஆண்டு மத்தியிலோ அல்லது 2021ஆம் ஆண்டு இறுதியிலோ கிடைக்கும்" - மருத்துவ நிபுணர் கார்க்

மருத்துவ நிபுணர் கார்க்
மருத்துவ நிபுணர் கார்க்
author img

By

Published : Nov 13, 2020, 5:00 PM IST

கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டின் மூன்றாம்கட்ட ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (SII - Serum Institute of India), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவித்துள்ளன. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் இந்தத் தடுப்பூசி மருந்து முதலில் பயன்பாட்டுக்கு வரும் தடுப்பூசி மருந்தாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக மூத்த மருத்துவ நிபுணரான டாக்டர் சுனீலா கார்க், ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் இயக்குனரும் பேராசிரியருமான டாக்டர் கார்க், மூன்றாம்கட்டப் பரிசோதனைகளுக்கு வெற்றிகரமாக தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நாம் ஆன்டிபாடிகளின் பரவல் குறித்து சரியாக அறிந்து கொள்ளப்போகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகில் அதிகம் தடுப்பூசி மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவமாக உருவெடுத்துள்ள எஸ்ஐஐ (சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா) ஏற்கனவே 40 மில்லியன் டோஸ்கள் தடுப்பூசி மருந்தைத் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு தலைமையகத்தின் (DCGI - Drugs Controller General of India) அபாயகர உற்பத்தி மற்றும் கையிருப்பு உரிமத்தின் கீழ் இந்தத் தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் "40 மில்லியன் டோஸ்கள் மருந்து தயாரித்துள்ளது நமது தன்னம்பிக்கையைக் காட்டினாலும், நாம் இந்த சோதனைக் கட்டம் முடிவடையும்வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என மருத்துவர் கார்க் தெரிவித்துள்ளார்.

'கோவிஷீல்ட்' தடுப்பூசி மருந்தின் கிளினிக்கல் ட்ரையலுக்கான நிதி உதவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும், பிற நிதி உதவிகளை சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவும் ஏற்கனவே அளித்துள்ளன. தற்போது 15 வெவ்வேறு பரிசோதனை மையங்களில் SII - ICMR இணைந்து கோவிஷீல்டின் 2/3ஆம் கட்டப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

கோவிஷீல்ட் குறித்து மருத்துவ நிபுணர் கார்க்கின் கருத்து

முன்னதாக இந்தப் பரிசோதனையில் பங்கேற்பதற்காக ஆயிரத்து 600 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. தடுப்பூசி உருவாக்கம், உற்பத்தி ஆகியவற்றில் உலக அளவில் தற்போது இந்தியா ஒரு முக்கிய இடத்தினை வகிப்பதாகவும், SII தனது தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு தொடர்ந்து தங்களது ஆராய்ச்சி, உற்பத்தி வலிமைகளை நிரூபித்து வருவதாகவும் ஐசிஎம்ஆர் இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா முன்னதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்துப் பேசியுள்ள டாக்டர் கார்க், ”மேலும் இரண்டு உள்நாட்டு கரோனா தடுப்பூசி மருந்துகளின் (பாரத் பயோடெக், சைடாஸ் கடிலா நிறுவனங்களின் மருந்துகள்) மனிதர்கள் மீதான சோதனையும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாம் இந்த சோதனைகளின் அனைத்துக் கட்டங்களும் முடிவடைவதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றை பாதுகாத்து வைக்க வேண்டும். இவற்றுக்கான விநியோக சங்கிலியை கவனமாக நிர்வகிக்க வேண்டும். அனைத்துக் காரணிகளையும் கொண்டு ஆராய்ந்தால் இந்த மருந்துகள் 2021ஆம் ஆண்டு மத்தியிலோ அல்லது 2021ஆம் ஆண்டு இறுதியிலோ கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, அமெரிக்காவின் பிஸ்ஸர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி மருந்து குறித்துப் பேசிய கார்க், ”பிஸ்ஸரின் தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைப்பது இந்தியாவிற்கு ஒரு பிரச்னையாக இருக்காது.

இந்த மருந்துகள் 80 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் சேமித்து வைக்கப்படவேண்டும். அது குறித்த முழுமையான விநியோக சங்கிலி பற்றி தான் நாம் தற்போது கூர்ந்து கவனிக்க வேண்டும். இவற்றையெல்லாம் இந்தியா ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நிச்சயம் செய்து முடிக்கும்" என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.