மும்பை: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு டோஸ் ஒன்று 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்ஐஐ தலைமை நிர்வாக அலுவலர் ஆதர் பூனவல்லா, தடுப்பூசி பயன்பாட்டில் 50 சதவீதம் மத்திய அரசிற்கும், மீதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தடுப்பூசி் ஒரு டோஸ் ரூ .1,500 க்கும் ரஷ்ய மற்றும் சீன தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.750க்கும் விற்பனை செய்யப்படும் எனவம் அவர் கூறியுள்ளார்.
நான்கு முதல் ஐந்து மாதங்களில் கோவிஷீல்ட் சில்லறை மற்றும் தடையற்ற வர்த்தகத்தில் கிடைக்கும். அனைத்து கார்ப்பரேட் மற்றும் தனியார் துறையினரும் தடுப்பூசிகளை அரசு மற்றும் தனியார் சுகாதார அமைப்புகள் மூலம் அணுகி பெற்றுக் கொள்ளலாம்" என்றும் அவர் கூறினார்.