ETV Bharat / bharat

அக்டோபர்- நவம்பரில் மூன்றாம் அலை? - சமீரன் பாண்டா

கோவிட் இரண்டாம் அலை தீவிரமாக இருந்த நேரங்களில் நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பாதிப்புகள் தினமும் ஏற்பட்டன. இதற்கிடையில் கோவிட் மூன்றாம் அலை வருகிற அக்டோபர்- நவம்பரில் தீவிரமாகக்கூடும் என கான்பூர் ஐஐடி பேராசிரியர் கூறியுள்ளார்.

Covid
Covid
author img

By

Published : Aug 30, 2021, 10:54 PM IST

டெல்லி : கோவிட் இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை தீவிரமாக இருக்கக்கூடும் நிபுணர்கள் எச்சரித்துவருகின்றனர்.

இது குறித்து கான்பூர் ஐஐடி பேராசிரியர் மணீந்திர அகர்வால் கூறுகையில், “செப்டம்பர் மாதத்தில் 50 விழுக்காடு வைரஸ்கள் அதிகமாக பரவக்கூடும். அந்த வகையில் செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் மூன்றாம் அலை தீவிரமாக பரவும்.

Covid
கோவிட்

அப்போது நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பாதிப்புகள் ஏற்படக் கூடும். மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும்போது ஒன்றரை முதல் 2 லட்சம் பாதிப்புகள் தினந்தோறும் ஏற்படலாம்” என்றார்.

முன்னதாக ஐசிஎம்ஆர் (தொற்றுநோய்கள் தடுப்பு பிரிவு) மருத்துவர் சமீரன் பாண்டா கூறுகையில், “கோவிட் மூன்றாம் அலையை யாராலும் கணிக்க முடியாது. இதைத் தடுக்க மாவட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

Covid
தடுப்பூசி

இதற்கிடையில் நாட்டில் இன்று 42 ஆயிரம் பேர் புதிதாக கரோனா வைரஸிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 380 ஆக உள்ளது.

அந்த வகையில் கரோனா பாதிப்புகள் 3.02 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் வெகமெடுக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : கோவிட்-19 சந்தேகங்கள்: பதில் அளிக்கும் மருத்துவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.