நாடு முழுவதும் கரோனா அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 73 ஆயிரத்து 810 என பாதிப்பின் எண்ணிக்கைப் பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து நாள்களாக கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் மேலாக நீடித்துவருகிறது.
இதுவரை நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919 ஆக உள்ளது. அதேபோல், தற்போது 19 லட்சத்து 29 ஆயிரத்து 329 பேர் மருத்துவம் பெற்றுவருகின்றனர்.
புதிதாக ஆயிரத்து 619 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 821 ஆகும்.
தற்போது கரோனா தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கைத் தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. இதுவரை 12 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரத்து 566 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.