யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் கரோனா எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதையடுத்து, கொச்சியிலுள்ள தெற்கு கடற்படைப் பிரிவு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்னும் பெயரில் இரண்டு கடற்படைக் கப்பல்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பிவைக்கபப்ட்டுள்ளன.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் தீர்ந்துபோன பிறகு அவற்றை மீண்டும் நிரப்ப இந்தியாவிற்கு கொண்டுவரவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, மருத்துவ உதவியை மேம்படுத்தும்விதமாக ஒரு மருத்துவக் குழு(ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்), பிபிஇ, ஆர்ஏடிடி போன்ற மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம், கையுறைகள், பிற மருத்துவப் பொருள்கள் ஆகியவையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன
கவரட்டி தீவுகளை மையமாகக் கொண்ட கடற்படை அலுவலர் (லட்சத்தீவு) உள்ளூர் நிர்வாகத்திற்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யவிருக்கிறார்.