ETV Bharat / bharat

லக்னோ: பல்வேறு வினாக்களை எழுப்பும் கரோனா இறப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள்! - கரோனா பாதிப்பு விவரங்கள்

லக்னோவில் நடந்த கரோனா இறப்புகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. பின்னிரவு வரை, உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன. கரோனாவால் உயிரிழந்தவரை தகனம் செய்வதற்கு உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்தியுள்ளது. இந்த மரணங்கள் கரோனா இறப்புகள் தொடர்பாக அளிக்கப்படும் அதிகாரப்பூர்வ தகவல்கள் குறித்து பல்வேறு வினாக்களை எழுப்புகின்றன. அரசாங்க அறிக்கைகள் கரோனா காரணமாக இறப்புகளை குறைவாக காட்டும் நிலையில், இறுதி சடங்குகளுக்காக ஏராளமான சடலங்கள் ஏன் தகனத்திற்கு வருகின்றன? கரோனாவைத் தவிர, மக்களின் வாழ்க்கையில் வேறு எது மரணத்தை ஏற்படுத்துகிறது!

பல்வேறு வினாக்களை எழுப்பும் கரோனா இறப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள்

author img

By

Published : Apr 18, 2021, 4:59 AM IST

கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் புகழ்பெற்ற வரி உள்ளது, ஜாபர் எவ்வளவு துரதிர்ஷ்டவசமானவர்! அடக்கம் செய்ய பிரியமான மண்ணில் ஆறடி நிலம் கூட சொந்தமில்லை – (கிட்னா ஹை பத்னசீப் ஜாபர் தஃபான் கே லியே / தோ கஜ் ஜமீன் பி நா மில்லி கு-இ-யார் மெய்ன்) இந்த வரியை இயற்றியபோது, ​​அது லக்னோவில் உண்மையாக மாறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். கரோனா தொற்று, தலைநகர் உத்திரப் பிரதேசத்தில் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை, 5,183 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தரவுகளின்படி, 26 பேர் உயிர் இழந்தனர். இருப்பினும், இரண்டு தகன மைதானங்களில் இரவு முழுவதும் உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் 108 உடல்கள் புதைக்கப்பட்டன. நகரின் வெவ்வேறு சுடுகாடுகளில் குறைந்தது 60 சடலங்கள் தகனம் செய்யப்பட்டன.

உத்திரப் பிரதேச தலைநகரில் அரசாங்க பதிவு இறப்புகளை விட ஏழு மடங்கு அதிகமான சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன என்று சொல்ல தேவையில்லை. இறுதி சடங்குகளுக்காக தகன மைதானங்களிலும், கல்லறைகளிலும் உள்ள சடலங்களின் நீண்ட வரிசை, மக்கள் மத்தியில் கரோனாவால் இறந்தவர்களின் அதிகாரபூர்வ பதிவுகள் துல்லியமானதா இல்லையா என்பது குறித்து பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது. இரண்டாவது கேள்வி கரோனா நோயாளிகள் யாரும் மருத்துவமனைகளுக்கு வரவில்லையா என்பதுதான். இந்த வழக்கில் அவை முறையாக விசாரிக்கப்படவில்லை. இவை அனைத்தினாலும், இறப்புகளின் அதிகாரபூர்வ எண்ணிக்கை உண்மையான நிலவரத்தை விட மிகக் குறைவு.

லக்னோ நகர ஆணையர் அஜய் திவேதி கூறுகையில், நகரின் பைசா குண்ட் மற்றும் குலாலா காட் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை இரவு 108 சடலங்கள் தகனம் செய்யப்பட்டன. இந்த நாள்களில் தகனம் செய்வதற்கு இடம் இல்லாததால், காலியாக உள்ள பிற இடங்களிலும் தகனம் செய்யப்படுவதாக கூறுகின்றனர். தகன கூடங்களில் திடீரென அதிகரித்துள்ள இறந்த உடல்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, கல்லறைகளில் கூட, உடல்களை அடக்கம் செய்வதற்கு ஒரு பெரிய வரிசை உள்ளது. லக்னோவில் பெரிய மற்றும் சிறிய அளவில் மொத்தம் 100 கல்லறைகள் உள்ளன என்று கல்லறைக் குழுவின் இமாம் அப்துல் மாட்டின் கூறினார். வழக்கமாக ஐந்து முதல் ஆறு பேர் இந்த கல்லறைகளில் சாதாரண நாள்களில் அடக்கம் செய்யப்படுவர். தற்போது, ​​தினமும் சராசரியாக 60 முதல் 70 பேர் அடக்கம் செய்யப்படுகிறார்கள். மேலும் சன்னிகளால் நிர்வகிக்கப்படும் ஐஷ்பாக்கில் உள்ள கல்லறைக்கும், டாக்கடோராவில் உள்ள ஷியாக்களின் கர்பலா கல்லறைக்கும் அதிகமான சடலங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

அதிகமான உடல்கள் வருவதால், கல்லறை தோண்ட அதிகமான கட்டணம் வசூல்

வியாழக்கிழமை, அட்னான் டேனிஷ் என்பவரின் தந்தை இறந்தார். அவர் தனது உற்றார் மற்றும் உறவினருடன் தனது தந்தையின் உடலை அடக்கம் செய்ய ஐஷ்பாக் கல்லறைக்கு வந்தார். இறப்புகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால், உடலை அடக்கம் செய்ய காத்திருக்க வேண்டியிருந்தது என்று அட்னான் டேனிஷ் கூறினார். பொதுவாக கல்லறை தோண்டுபவர்கள் ஒரு கல்லறைக்கு ரூ.800 பெற்றுக்கொள்வர். இப்போது கல்லறை தோண்ட ஒரு கல்லறைக்கு ஆயிரத்து 500 ரூபாய் முதல் 2ஆயிரத்து 500 ரூபாய் வரை கோருகின்றனர். சோகமான விஷயம் என்னவென்றால், அதிக பணம் செலுத்துபவர்களுக்கு, முதலில் கல்லறை தோண்டப்படுகிறது, மற்றவர்கள் காத்திருக்க வேண்டும்.

உடலை கொண்டு செல்வதற்கான கட்டணம் மிக அதிகம்

அட்னன் டேனிஷ் தனது தந்தை ஒரு மருத்துவக் கல்லூரியில் இறந்ததாக கூறினார். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஐஷ்பாக் கல்லறை உள்ளது. அவர் மருத்துவக் கல்லூரியில் இருந்து வண்டியை முன்பதிவு செய்தபோது, ​​உடலை கல்லறைக்குக் கொண்டு செல்ல ரூ .2200 கோரப்பட்டது. அவர் இந்த கட்டணத்தை வேறு வழியில்லாமல் தர வேண்டியிருந்தது.

கல்லறைகளில் இட நெருக்கடி இல்லை

கல்லறைக் குழுவின் இமாம் அப்துல் மாட்டின் கருத்துப்படி, இவ்வளவு அதிகமான சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் லக்னோவின் கல்லறைகளில் இடப் பற்றாக்குறை இல்லை. கல்லறையில் பல கல்லறைகள் பழமையானவை. மற்ற உடல்களை அடக்கம் செய்யக்கூடிய இடங்கள் காலியாக உள்ளன.

கிருஸ்தவ கல்லறையில் 15 நாள்களில் 15 பேர் அடக்கம்.

தலைநகர் லக்னோவில் கடந்த 15 நாள்களில், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த 15 பேர் கரோனா தொற்று காரணமாக இறந்தனர். கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதாக தந்தை ஜான் டிசோசா கூறுகிறார். பாதிக்கப்பட்ட நோயாளி இறந்து அடக்கம் செய்ய வரும்போது, ​​உடலை அடக்கம் செய்ய ஐந்து பேர் மட்டுமே கல்லறைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

கரோனா இறப்புத் தரவுகள்
கரோனா இறப்புத் தரவுகள்

உண்மை நிலவரம்

* வியாழக்கிழமை, லக்னோவில் கரோனா காரணமாக 26 பேர் இறந்தனர், ஆனால் 108 உடல்கள் தகனம் செய்யப்பட்டன

* லக்னோவின் 100 கல்லறைகளில் தினமும் சராசரியாக 5-7 சடலங்கள் புதைக்கப்பட்டன. இப்போது சுமார் 60 சடலங்கள் வருகின்றன

* கல்லறை தோண்டுபவர்கள் ஒவ்வொரு கல்லறைக்கும் ஆயிரத்து 500 ருபாய் முதல் 2ஆயிரத்து 500 ரூபாய் வரை கோருகின்றனர். முன்னதாக ஒரு கல்லறை 800 ரூபாய்க்குத் தோண்டப்பட்டது.

* உடலை கல்லறைக்குக் கொண்டு செல்ல வேன் கட்டணம் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு 2ஆயிரத்து 200 ஆகிறது.

* கடந்த 15 நாள்களில், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த 15 பேர் கரோனா காரணமாக உயிரிழந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.