இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பரவல் வேகம் குறையாமல் உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் புதிதாக 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 3 ஆயிரத்து 874 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்து 122ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தினசரி கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.