டெல்லி: நாட்டில் கரோனா பாதிப்பு 96 லட்சத்து 44 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதேபோல் குணமடைந்தோரின் எண்ணிக்கை 91 லட்சத்தை தாண்டியுள்ளது. தொற்றிலிருந்து மீண்டோரின் விகிதம் 94.37 விழுக்காடாக இருக்கிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய கரோனா பாதிப்பாளர்கள் 36 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96 லட்சத்து 44 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் (காலை 8 மணி நிலவரப்படி) 482 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதுவரை 91 லட்சத்து 792 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 94.37 விழுக்காடாக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.45 விழுக்காடாக உள்ளது.
தற்போது நாடு முழுவதும் நான்கு லட்சத்து மூன்றாயிரத்து 248 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதன்படி, புதிய பாதிப்பு விகிதம் 4.18 விழுக்காடாக இருக்கிறது.
நாட்டில் கரோனா பாதிப்பு எந்தெந்த நாள்களில் எவ்வளவு கடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.
தேதி | பாதிப்பு எண்ணிக்கை |
ஆகஸ்ட் 07 | 20 லட்சம் |
ஆகஸ்ட் 23 | 30 லட்சம் |
செப்டம்பர் 05 | 40 லட்சம் |
செப்டம்பர் 16 | 50 லட்சம் |
செப்டம்பர் 28 | 60 லட்சம் |
அக்டோபர் 11 | 70 லட்சம் |
அக்டோபர் 29 | 80 லட்சம் |
நவம்பர் 20 | 90 லட்சம் |
நாட்டில் இதுவரை 14 கோடியே 69 லட்சத்து 86 ஆயிரத்து 575 கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், நேற்று (டிச. 05) மட்டும் 11 லட்சத்து ஆயிரத்து 63 பேருக்கு கோவிட்-19 சோதனை நடத்தப்பட்டுள்ளது.