ETV Bharat / bharat

மேற்கு வங்கம் தேர்தல்: முன்னிலை நிலவரங்கள்!

மேற்கு வங்கம் சட்டப்பேரவை தேர்தலின் முன்னிலை விவரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

edge Initially
மேற்கு வங்கம்
author img

By

Published : May 2, 2021, 10:00 AM IST

மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் திருணாமூல், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

மொத்தம் 108 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவடைந்த நிலையில், தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

முதற்கட்ட சுற்றுகளின் முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 93 இடங்களில், டிஎம்சி கூட்டணி 136 இடங்களிலும் முன்னிலை வகுக்கிறது.

நட்சத்திர தொகுதியான நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி கிட்டத்தட்ட 5 ஆயிரம் வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். பெரும்பாலான தொகுதிகளில் திருணாமூல் முன்னிலை வகித்து வந்தாலும், அம்மாநில முதலமைச்சரே பின்னடவை சந்தித்திருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.