ETV Bharat / bharat

குஜராத் சபர்மதி ஆற்றில் கரோனா வைரஸ் - அதிர்ச்சி தகவல்

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்று நீரில் எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஐஐடி காந்திநகர் தகவல் வெளியிட்டுள்ளது.

GUJARAT
குஜராத்
author img

By

Published : Jun 18, 2021, 11:51 AM IST

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. தினந்தோறும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 60 ஆயிரமாக கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

இந்நிலையில், குஜராத்தின் சபர்மதி ஆற்றில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஐஐடி காந்திநகர் தெரிவித்துள்ளது.

சபர்மதி ஆற்றில் கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அங்கிருந்து எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

சபர்மதி மட்டுமல்லாமல் கங்காரியா, சந்தோலா ஏரியின் நீர் மாதிரிகளை சோதனை செய்ததிலும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, அசாமின் குவஹாத்தி பகுதியில் உள்ள ஆறுகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளிலும், கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதிரிகள் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் வீரியமிக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி காந்தி நகர் உட்பட இந்தியாவில் எட்டு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

இயற்கையான நீரிலும் வைரஸ் உயிர்வாழ முடியும் என்பதை இந்த ஆய்வு தெளிவாகக் காட்டுகிறது. எனவே, நாட்டின் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களை ஆராய வேண்டும், ஏனெனில் வைரஸின் பல தீவிரமான உருமாற்றம் இரண்டாவது அலைகளில் காணப்படுகின்றன. இந்த ஆய்வு முடிவு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இதையும் படிங்க: 'கரோனா 3ஆம் அலையால் குழந்தைகளுக்குப் பாதிப்பு இருக்காது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.