பெங்களூரு: பெங்களூரில் யாதவனஹள்ளி கேட் அருகே ஆக்ஸ்போர்டு மருத்துவமனை ஒன்று இயங்கிவருகிறது. இங்கு கரோனா நோயாளிகளும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் இன்று காலை (ஏப்ரல்24) படுக்கையிலிருந்து கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் அவருக்கு யாரும் உதவவில்லை; மருத்துவர்களும் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சுமார் நான்கு, ஐந்து மணி நேரமாக தரையில் கிடந்துள்ளார். வெகு நேரத்திற்குப் பின்னர் கவனித்ததும் நபர் இறந்துவிட்டது தெரியவந்தது.
எனவே, மருத்துவமனையில் மருத்துவர் அலட்சியம்காட்டுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ஊரடங்கு: தமிழ்நாடு - கர்நாடக இடையே பேருந்து இயக்கம்!