ETV Bharat / bharat

அதிர்ச்சி தகவல்: பேசினால் பரவும் கரோனா! - கரோனா தொற்று

டெல்லி: கரோனா தொற்று போசினாலும் பரவும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid spread
Covid spread
author img

By

Published : May 28, 2021, 1:02 PM IST

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இருமல், தும்மல் மூலம் தொற்று அதிகமாக பரவும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பேசினாலும் பரவும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் நாடு முழுக்க அதிகரித்து வரும் நிலையில், மேலும் கருப்பு, மஞ்சள், வெள்ளை, பச்சை என பூஞ்சைகளின் தாக்கம் அதிகரிப்பதால் பாதிப்புக்குள்ளாவர்களின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வருகிறது.

இந்தநிலையில், பேச்சின் மூலம் தொற்றுப் பரவும் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, அதற்காக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பில், “கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பேசும் போது வெளிவரும் எச்சிலின் பெரிய துகள்கள் இரண்டு மீட்டர் தூரத்திற்குள் விழுந்து விடும். ஆனால் சிறிய துகள்களான ‘ஏரோசோல்கள்’ 10 மீட்டர் வரை பரவலாம்.

இவை விழுந்த இடத்தை மற்றவர்கள் தெரியாமல் தொட்ட கைகளினால் கண்களிலோ, மூக்குப் பகுதியிலோ வைத்தால், தொற்று மேலும் வேகமாக பரவும். காற்றோட்டம் குறைவாக உள்ள அறைகளில், ஏரோசோல்களின் வீரியம் அதிக நேரம் இருக்கும் எனவும் சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அனைவரும் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி கடைபிடித்தல், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற வழிகாட்டுநெறிகளை கடைபிடிக்க வேண்டும். அதேசமயம் நல்ல காற்றோட்டமான பகுதிகளில் இருக்க வேண்டும். காற்றோட்டமான பகுதிகளில் தொற்று பரவலின் வேகம் குறைவாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: 20 கோடியைக் கடந்த தடுப்பூசி பயனாளர்களின் எண்ணிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.