இந்தியாவில் கடந்த சில நாள்களாகக் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 49 ஆயிரத்து 691 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்து 172ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேபோல, நேற்று (ஏப்ரல் 24) 2,767 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 311ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 40 லட்சத்து 85 ஆயிரத்து 110ஆக உள்ளது.
தற்போது, 26 லட்சத்து 82 ஆயிரத்து 751 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை மொத்தமாக 14 கோடியே 9 லட்சத்து 16 ஆயிரத்து 417 தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நர்சிங் கல்லூரியில் 93 மாணவர்களுக்கு கரோனா: கட்டுப்பாடு வட்டத்திற்குள் விடுதி!