கேதார்நாத்: கேதார்நாத் கோயிலுக்கு வெளியே இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர் இந்திரேஷ் மைகுரி கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நரேந்திர மோடி புனித தலத்திற்கு சென்ற புகைப்படங்கள் பவிமர்சங்களுக்கு உள்ளாகி வருகிறது.
கேதார்நாத் கோயிலை விட பெரியதாக பிரதமர் மோடி காட்சியளிக்கும் கேமரா கோணத்தை ஒரு பிரிவினர் விமர்சித்துள்ளனர். சிவனின் புனித தலமான பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இந்த கோயில் மோடியின் பின்னால் மறைந்துவிட்டது என்று பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அந்த புகைப்படத்தில், மோடியின் கைகள் உயர்ந்து கோயிலை விட உயரமாக காட்சியளிக்கிறது. முன்னதாக, பிரதமர் மோடி அணிந்திருந்த இமாச்சல பிரதேசத்தின் முக்கிய உடையான 'சோழ டோரா' என்ற உடைக்கு, காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் கரிமா தசோனி, “பிரதமரின் ஆடையின் பின்புறத்தில் ஸ்வஸ்திக் சின்னம் உள்ளது, இது அமங்கலமானது மற்றும் ஆட்சேபனைக்குரியது” எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: தீபாவளியையொட்டி பிரதமர் மோடி அயோத்தியாவுக்கு பயணம்