ETV Bharat / bharat

இந்திய அரசியலமைப்பு பற்றிய சர்ச்சை பேச்சு- கேரள அமைச்சர் ராஜினாமா - கேரள அமைச்சர் ராஜினாமா

இந்திய அரசியலமைப்பு பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த கேரள அமைச்சர் சஜி செரியன் அவரது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய அரசியலமைப்பு பற்றிய சர்ச்சை பேச்சு- கேரள அமைச்சர் ராஜினாமா

author img

By

Published : Jul 7, 2022, 12:17 PM IST

திருவனந்தபுரம்:இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக சர்ச்சைக்கு ஆளான கேரள மீன்வளம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியன் நேற்று (ஜூலை 6) தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியில் நடந்த உள்ளூர் சிபிஎம் விழாவில் பேசிய செரியன் , இந்திய அரசியலமைப்பு மக்களைக் கொள்ளையடிக்க அனுமதித்துள்ளது என்றும் இது ஆங்கிலேயர்களின் வழிகாட்டுதலின்படி எழுதப்பட்டது என்றும் கூறினார்.

அவரது பேச்சுக்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் அவரை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தின. சிபிஎம் மாநில செயலகம் சார்பில் அவசரக் கூட்டத்தைக் கூட்டப்பட்டது.

செரியனிடம் ராஜினாமா செய்யக் கூறாமல் நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்க முடிவு செய்திருந்தனர். எனினும் நேற்று மாலையில் செய்தியாளர் சந்திப்புக்கு அமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் தான் பதவி விலகுவதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதம் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘சிதம்பரம் நடராஜர் கோயில் என்றாலே பிரச்சினைதான்’ - தமிழிசை சௌந்தரராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.