ஆதார் அட்டையில் இடம்பெற்றுள்ள தனி நபரின் தகவல்களை தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதால் அதனை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் , மறைக்கப்பட்ட ஆதார் அதாவது மொத்தமுள்ள 12 எண்களில் முதல் 8 எண்களை மறைத்து விட்டு இறுதி 4 எண்களை மட்டும் உபயோகப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மறைக்கப்பட்ட ஆதாரை பெற அதிகாரப்பூர்வ இணையத்தில் DO U WANT MASKED OPTIONஐ பயன்படுத்தி கொள்ளவும் யுஐடிஏஐ சுற்றறிக்கை வெளியிட்டது. இது குறித்து அகில இந்திய இளையோர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் தனது ட்விட்டர் பதிவில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
-
जब देश के हर हिंदुस्तानी का आधार कार्ड देश के हर कोने में बंट चुका है, तब सरकार को याद आया कि ऐसा करना खतरनाक हो सकता है..!
— Srinivas BV (@srinivasiyc) May 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
बड़ी देर नही कर दी 'हुजूर' आते-आते?? pic.twitter.com/fpbltrIlsN
">जब देश के हर हिंदुस्तानी का आधार कार्ड देश के हर कोने में बंट चुका है, तब सरकार को याद आया कि ऐसा करना खतरनाक हो सकता है..!
— Srinivas BV (@srinivasiyc) May 29, 2022
बड़ी देर नही कर दी 'हुजूर' आते-आते?? pic.twitter.com/fpbltrIlsNजब देश के हर हिंदुस्तानी का आधार कार्ड देश के हर कोने में बंट चुका है, तब सरकार को याद आया कि ऐसा करना खतरनाक हो सकता है..!
— Srinivas BV (@srinivasiyc) May 29, 2022
बड़ी देर नही कर दी 'हुजूर' आते-आते?? pic.twitter.com/fpbltrIlsN
அந்த ட்விட்டர் பதிவில், இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு பயன்களை பெற தங்களது ஆதார் அட்டையை உபயோகப்படுத்திய நிலையில் தற்போது இப்படியொரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருப்பது, ஆபத்தை மத்திய அரசு தற்போதுதான் உணர்ந்திருப்பதை காட்டுவதாகவும், ஆனால் இது மிக தாமதமானது எனவும் தெரிவித்திருந்தார். இதே போல் பலரும் கண்டனம் தெரிவிக்க சர்ச்சை பெரிதானது.
இந்த நிலையில் யுஐடிஏஐ வெளியிட்ட சுற்றறிக்கை திரும்ப பெறப்படுவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு பொதுமக்கள் ஆதார் எண்ணை பயன்படுத்துவதிலும், பகிர்ந்து கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
மேலும் ஆதார் அட்டையை பொதுமக்கள் வழக்கம்போல் பயன்படுத்தலாம், ஆனால் யுஐடிஏஐ-விடமிருந்து பயனர் உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டுமே வழங்குங்கள், அதே போல் தகவலை கேட்கும் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளதா என்பதை யுஐடிஏஐ இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி