ETV Bharat / bharat

ஆந்திர காவலர்கள் செய்த சம்பவம்...! - police changed thieves

ஆந்திரா: மேற்கு கோதாவரி மாவட்டத்தில் திருடனைப் பிடிக்க வேண்டிய காவலர்களே திருடர்களாக மாறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர்
காவல்துறையினர்
author img

By

Published : Mar 20, 2021, 8:16 PM IST

Updated : Mar 20, 2021, 9:54 PM IST

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மதுபான கடை உரிமையாளர், மதுபான விற்பனையிலிருந்து வந்த வருமானமான எட்டு லட்சம் ரூபாயை காவல் நிலையத்தில் வைத்திருந்தார். வங்கிகள் தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறையிலிருந்ததால் பணத்தைப் பிறகு பெற்றுக்கொள்கிறேன் என்று கூறி காவல் நிலையத்தில் வைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மீண்டும் அவர் தனது பணத்தை எடுக்க காவல் நிலையத்திற்குச் சென்றபோது தான் வைத்திருந்த பெட்டியில் பணம் காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து இது குறித்து சிசிடிவியை காவல் துறையினர் ஆய்வு செய்தபோதுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் கங்காஜலம், கணேஷ் ராவ் ஆகிய இரண்டு காவலர்களும், அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தபோது, பெட்டியிலிருந்த பணத்தைத் திருடியது தெரியவந்தது.

மேலும் அவர்கள் திருடிய பணத்தை காவல் நிலையத்திற்கு வெளியே இருக்கும் குப்பைக்கு நடுவே மறைத்து வைத்ததும், சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் இரண்டு பேரையும் கைதுசெய்து, காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திருடனைப் பிடிக்க வேண்டிய காவலர்களே திருடர்களாக மாறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Mar 20, 2021, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.