ஆந்திர பிரதேசம்: பிரதமர் நரேந்திர மோடி விடுதலைப் பேராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள ஆந்திர மாநிலம் பீமாவரத்திற்கு இன்று (ஜூலை 4) வருகை தந்தார். அங்கு அல்லூரி சீதாராம ராஜுவின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
முன்னதாக, ஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கன்னவரம் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி நிகழ்ச்சி இடத்திற்கு சென்ற போது, வானில் கருப்பு பலூன் பறக்கவிட்டப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரை கன்னவரம் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடியோ: விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ராகுல் காந்தி