குஜராத்: குஜராத் மாநிலம், தாஹூத் நகரில் நடைபெற்ற பழங்குடியினரின் பேரணியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ’பாஜக அரசு பழங்குடியினரின் உரிமைகளைப் பறிக்கிறது என்று குற்றம் சாட்டினார். பாஜக அரசு பழங்குடி மக்களுக்கு எதையும் கொடுக்கவில்லை, மாறாக அவர்களிடமிருந்த அனைத்தையும் பறிக்கிறது’ என்று கூறினார்.
குஜராத்தில் உள்ள சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்புகளையும் உருவாக்க பழங்குடியினர் பாடுபட்டனர் என்றும்; ஆனால் அவர்களுக்கு அரசிடமிருந்து நல்ல கல்வியோ, மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
ஏழைகளுக்கு ஒன்று, பணக்காரர்களுக்கு ஒன்று என இரண்டு இந்தியாவை பாஜக அரசு உருவாக்கியுள்ளது என்றும், ஏழை மக்களுக்குச் சொந்தமான வளங்களை எல்லாம் பறித்து, சில பணக்காரர்களுக்கு கொடுக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.