ETV Bharat / bharat

சாதிவாரி கணக்கெடுப்பு, விவசாய கடன் தள்ளுபடி என சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதிகள் விவரம்!

Chhattisgarh Congress Manifesto: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியை அம்மாநிலத்தின் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் இன்று (நவ.5) வெளியிட்டார்.

congress-unveils-manifesto-for-chhattisgarh-polls-promises-caste-census-higher-paddy-procurement-price
சத்தீஸ்கர் தேர்தல்: சாதிவாரி கணக்கெடுப்பு, அதிக விலைக்கு நெல் கொள்முதல் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ்...
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 7:13 PM IST

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கி முடிவுகள் அன்றே வெளியாகும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்தல் வாக்குறுதிகள் கொண்ட அறிக்கை இன்று (நவ.5) வெளியிடப்பட்டது.

சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வாக்குறுதிகள் கொண்ட அறிக்கை இன்று (நவ.5) வெளியிடப்பட்டது. இதில், சாதிவாரி கணக்கெடுப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி, நெல் குவிண்டாலுக்கு ரூ.3200க்கு கொள்முதல் மற்றும் புதிய திட்டத்தின் கீழ் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் கட்சியாகக் காங்கிரஸ் இருந்து வருகிறது. தற்போது, சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை 'பரோஸ் கா கோஷனா பத்ரா 2023-2028' என்ற தலைப்பில் 6 வெவ்வேறு இடங்களில் வெளியிட்டது. இதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்பூர், ராஜ்நந்த்கான், ஜக்தல்பூர், பிலாஸ்பூர், அம்பிகாபூர் மற்றும் கவர்தா ஆகிய ஆறு இடங்களில் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. ராஜ்நந்த்கான் பகுதியில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலும், ராய்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி மாநில பொறுப்பாளர் குமாரி செல்ஜா வாக்குறுதிகளை வெளியிட்டனர்.

காங்கிரஸ் கட்சியினர் தரப்பில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 6 இடங்களில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயக் கடன் தள்ளுபடி, சாதிவாரி கணக்கெடுப்பு, ஏக்கருக்கு 20 குவிண்டால் நெல் கொள்முதல், நெல் குவிண்டாலுக்கு ரூ.3200க்கு கொள்முதல் மற்றும் கே.ஜி (KG) முதல் முதுகலை பட்டப்படிப்பு வரையில் இலவசக் கல்வி உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிக்கையாக வழங்கினர்.

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தேர்தல் வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிட்ட பின் மேடையில் பேசும் போது, ராஜீவ்காந்தி நியாய யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்படும் மானியம் உட்பட நெல் குவிண்டாலுக்கு ரூ.3200 வழங்கப்படும். தேனு இலை சேகரிப்புக்கு (Tenu Leaf Collection) ரூ.4000 வழங்கப்பட்டுவந்த நிலையில் ரூ.6000 வழங்கப்படும். மஹ்தாரி நியாய் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு பெண்களுக்கு ரூ.500 சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும், இந்த மானியம் நேரடியாகப் பெண்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக தங்கள் வாக்குறுதிகளை காப்பி அடித்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.