ETV Bharat / bharat

"டிச.6 இந்தியா கூட்டணியின் கூட்டம் முறைப்படியான கூட்டம் அல்ல" - காங்கிரஸ் திடீர் அறிவிப்பு! - டிசம்பர் 6 இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்

டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் சாதாரணக் கூட்டம் என்றும் முறையான கூட்டம் குறித்து விரைவில் ஆலோசித்து அறிவிக்கப்படும் என காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 4:06 PM IST

டெல்லி : மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் ஆட்சியும் காலாவதியாகின.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, வரும் டிசம்பர் 6ஆம் தேதி எதிர்க் கட்சிகளின் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் 27 முதல் 28 எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என கருதப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்து உள்ள டிசம்பர் 6ஆம் தேதியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி தெரிவித்து உள்ளார். அதேபோல் தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்டு உள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர்களின் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

அதேபோல் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக தங்கள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இந்நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் கூட்டம் முறைப்படியான கூட்டம் இல்லை என்றும் விரைவில் முறையான கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சியாக தன்னை காட்டிக் கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டு இருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் சம்மட்டி அடிபோல் மாறியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி? ராகுல் காந்தி தேர்வு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.