ETV Bharat / bharat

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அதிரடி நீக்கம்! என்ன காரணம்?

மத்திய பிரதேசம் காங்கிரஸ் தலைவராக ஜித்து என்கிற ஜித்தேந்திர பட்வாரியை நியமித்து தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டு உள்ளார்.

Kamalnath  - Jitu patwari
Kamalnath - Jitu patwari
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 9:59 PM IST

டெல்லி : 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்திற்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் பாஜக 163 இடங்களை கைபற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

மத்திய பிரதேச முதலமைச்சராக பாஜக தலைவர் மோகன் யாதவ் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசத்தில் 114 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

அதன் அடுத்த ஐந்து வருடங்களில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கடும் சரிவை சந்தித்து உள்ளது. இந்நிலையில், தேர்தல் தோல்வியை அடுத்து மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தை, கட்சி மேலிடம் நீக்கி உள்ளது. மேலும் அவருக்கு பதிலாக ஜித்து பட்வாரி மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சட்டப் பேரவை தேர்தல் வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான நிலையில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து கமல்நாத் ராஜினாமா செய்ய்யுமாறு தெரிவிக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்த கமல்நாத் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை வழங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து உடனடி நடவடிக்கையாக மத்திய பிரதேசம் காங்கிரஸ் தலைவராக ஜிதேந்திர பட்வாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல் மத்திய பிரதேச சட்டப்பேரவை தலைவராக ஸ்ரீ உமங் சிங்காரையும், துணை சட்டப்பேரவை தலைவராக ஸ்ரீ ஹேமந்த் கத்தாரேவையும் காங்கிரஸ் கட்சி மேலிடம் நியமித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : எம்.பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா திடீர் கடிதம்! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.