டெல்லி : காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரஜனி அசோக் ராவ் பாட்டீலின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பிப்ரவரி 10 ஆம் தேதி, அவையில் நடந்த அமளியை மகாரஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ரஜனி அசோக் ராவ் பாட்டீல் வீடியோவாக படம் பிடித்து வெளியிட்டு உள்ளார்.
அவை நடவடிக்கைகளை மீறி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை காங்கிரஸ் எம்.பி. ரஜனி அசோக் ராவ் பாட்டீல் படம் பிடித்து வெளியிட்டதாக பாஜக எம்.பி. ஜி.வி.எல். நரசிம்ம ராவ், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் குழு அமைத்து, காங்கிரஸ் எம்.பி. ரஜனி அசோக் ராவ் பாட்டீல் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தினார்.
இதையடுத்து 4 மாதங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ரஜனி அசோக் ராவ் பாட்டீல் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி ரஜனி அசோக் ராவ் பாட்டீல் மாநிலங்களவையில் முறையிட்டு இருந்தார். இதையடுத்து ரஜனி அசோக் ராவ் பாட்டீல் இடைநீக்க உத்தரவை நாடாளுமன்ற சிறப்புக் குழு ரத்து செய்ததாக தெரிவிக்கப்ப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மாநிலங்களவைக்கு ரஜனி அசோக் ராவ் பாட்டீல் மீண்டும் வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பிப்ரவரி 10ஆம் தேதி மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இந்த அமளியை மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ரஜனி அசோக் ராவ் பாட்டீல், வீடியோவாக எடுத்து வெளியிட்டதாக பாஜக எம்.பி. ஜி.வி.எல். நரசிம்ம ராவ் புகார் அளித்து இருந்தார். அந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ரஜனி அசோக் ராவ் பாட்டீல் 4 மாதங்கள் மாநிலங்களவை வரை தடை விதிக்கப்பட்டது.
ரஜனி அசோக் ராவ் பாட்டீல் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு அப்போதையை கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.க்கள் அவை வெளிநடப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Parliament Adjourned : எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு!