2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து அக்கட்சிக்கு இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பு வகித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான முழுநேர தலைவர் தேவையான அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய தலைவர் தேர்வு தொடர்பாக இன்று நடைபெற்ற கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் கரோனா பாதிப்பு போன்ற காரணங்களால் புதிய தலைவர் தேர்தல் தாமதமாகிறது எனவும், தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை கட்சி தயார் செய்துவிட்டதாகவும் ஜூன் மாத இறுதிக்குள் புதிய தலைவர் தேர்வு நடைபெறும் எனக் கூறியுள்ளார்.
புதிய தலைவர் தேர்வுக்கான தேர்தல் அட்டவணையை கட்சியின் தேர்தல் நிர்வாகி மதுசூதனன் மிஸ்திரி தயார் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். கட்சியின் புதிய தலைவராக மீண்டும் ராகுல்காந்தியை தேர்வு ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.