உத்தர பிரதேசம் (லக்னோ): இந்தியா கூட்டணிக்கான காங்கிரஸ் கட்சியின் தலைவர் பி.எல்.புனியா கூறும் போது: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பே தங்களது அணிக்கான பிரதமர் முடிவு செய்யப்படுவார். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளில் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி-க்கள் பிரதமர் யார் என்பதை தேர்ந்தெடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அரசை எதிர்த்து வெற்றி பெற ஜக்கிய முன்னணி கட்சிகளின் கூட்டணிகளை உருவாக்க இந்தியாவில் உள்ள 26 எதிர்கட்சிகள் ஒன்று இணைந்து இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி (I.N.D.I.A.) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.
-
संविधान विरोधी ताकतों के खिलाफ देश एकजुट होगा , मोहब्बत जीतेगी नफरत का हारेगी . pic.twitter.com/zR5wmJCP3k
— P L Punia (@plpunia) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">संविधान विरोधी ताकतों के खिलाफ देश एकजुट होगा , मोहब्बत जीतेगी नफरत का हारेगी . pic.twitter.com/zR5wmJCP3k
— P L Punia (@plpunia) July 18, 2023संविधान विरोधी ताकतों के खिलाफ देश एकजुट होगा , मोहब्बत जीतेगी नफरत का हारेगी . pic.twitter.com/zR5wmJCP3k
— P L Punia (@plpunia) July 18, 2023
இந்த கூட்டணி 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) எதிர்கொள்ளும். பா.ஜ.க அரசு முன்றாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதை தடுக்க ”இந்தியா” என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Margadarsi Chit Fund: கர்நாடக மாநிலம் கோலாரில் மார்கதர்சி நிறுவனத்தின் 22வது கிளை துவக்கம்!
இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 23-ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரணடாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற்றது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ராகுல் காந்தி சுமார் 55000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க-வின் வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோலிவியுற்றார். ஆனால், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பா.ஜ.கவின் ஸ்மிருதி இரானி தோற்கடிக்கப்படுவார். இந்த முறை காங்கிரஸ் அல்லது இந்தியா கூட்டணியின் வேட்பாளர் இத்தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதி தற்போது காங்கிரஸ் கோட்டையாக மாறியுள்ளது என பி.எல்.புனியா கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "ராஜீவ் காந்தி எண்ணிலடங்கா சாதனைகளுக்கு சொந்தக்காரர்" - சோனியா காந்தி புகழாரம்!