குஜராத்: 182 உறுப்பினர்களைக்கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆம்ஆத்மியும் உத்வேகத்துடன் பிரசாரம் செய்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி, குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 4ஆம் தேதி அறிவித்தது. அதில் 43 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இரண்டாம் கட்டமாக கடந்த 10ஆம் தேதி 46 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. கடந்த 11ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதிகளில், மூன்று மற்றும் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று(நவ.13) ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 6 வேட்பாளர்கள் அடங்கிய அந்தப் பட்டியலில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மன்ஹர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐந்தாவது வேட்பாளர் பட்டியலின்படி, அதேபோல் மோர்பி தொகுதியில் ஜெயந்தி ஜெராஜ்பாய் படேல், ஜாம்நகர் ரூரல் தொகுதியில் ஜீவன் கும்பர்வாடியா, தரங்கத்ரா தொகுதியில் சட்டர்சிங் குஞ்சாரியா, ராஜ்கோட் மேற்கு தொகுதியில் மன்சுக்பாய் கலாரியா, கரியாதாரில் திவ்யேஷ் சாவ்தா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவில் மனைவி.. காங்கிரசில் தங்கை.. ஜடேஜாவின் வேண்டுகோள்!