ETV Bharat / bharat

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - 42 பேர்களுக்கான தொகுதிகள் என்னென்ன

கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 42 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

Congress candidates list
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
author img

By

Published : Apr 6, 2023, 9:18 PM IST

பெங்களூரு: 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு, மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருவதுடன், பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே கடந்த மாதம் 25ஆம் தேதி, 124 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

இந்நிலையில், 42 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப்ரல் 6) வெளியிடப்பட்டுள்ளது. இதில் அண்மையில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த 5 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த கோபால கிருஷ்ணாவுக்கு மொலகல்முரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த பாபு ராவ் சின்சான்சருக்கு, குர்மித்கல் தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஸ்ரீனிவாசுக்கு கப்பி தொகுதியும், தேவராஜூக்கு கே.ஆர்.பேட் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவில் இருந்து விலகிய வி.எஸ்.பாட்டீலுக்கு எல்லாபுர் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அந்த தொகுதியின் வேட்பாளர் குறித்து இரண்டாம் கட்டப் பட்டியலில் அறிவிப்பு வெளியாகவில்லை. அடுத்தகட்ட பட்டியலில் கோலார் தொகுதி வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்தார் அனில் ஆண்டனி: தவறான முடிவை எடுத்துவிட்டதாக தந்தை ஏ.கே.ஆண்டனி வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.