2020ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகம் நாட்டின் குற்றப்பதிவுகள் குறித்த புள்ளி விவரங்களை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், கடந்தாண்டு நாடு முழுவதும் நடைபெற்ற சாதி, மத மோதல் குறித்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
அதில், 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் நாட்டின் சாதி, மத மோதல் குற்றங்கள் சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டில் இந்தக் குற்றத்தின்கீழ் 438 வழக்குகள் பதிவான நிலையில், 2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 857ஆக அதிகரித்துள்ளது.
2020ஆம் ஆண்டின் பெரும் பகுதி கோவிட்-19 காரணமாக முடக்கத்திலிருந்த நிலையில் சாதி, மத மோதல் குற்றச்சம்பவம் அதிகரித்துள்ளது கவலைக்குரிய அம்சம் என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் காரணமாக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் இந்த மோதல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றுள்ளன. குறிப்பாக 2020ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற மத மோதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதை அறிக்கை குறிப்பிட்டு காட்டுகிறது.
இதையும் படிங்க: ஷார்ட்ஸ் அணிந்து தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு தடை