ETV Bharat / bharat

பசுமையான மாநிலமாக புதுச்சேரியை மாற்ற முயற்சி - ரங்கசாமி - puducherry latest news

புதுச்சேரியை பசுமையான மாநிலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

cm-rangasamy-press-meet
cm-rangasamy-press-meet
author img

By

Published : Aug 3, 2021, 2:12 PM IST

புதுச்சேரி : 75ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்னும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா பாகூர் கொம்யூனில் உள்ள மணப்பட்டு கிராமத்தில் இன்று (ஆக. 3) தொடங்கப்பட்டது.

மணப்பட்டு வனத் துறை தோட்டத்தளத்தில் மரம் நடும் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ”புதுச்சேரி பல்வேறு இடங்களில் வறட்சியாக உள்ளது. இதனைப் பசுமையாக்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் விரும்பினார். தற்போது 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பல லட்சம் மரங்கள் நடப்பட்டு புதுச்சேரியைப் பசுமையாக்குவோம்.

பாகூர் பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுத்துவருகிறோம். பாகூர் மீனவ கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தித் தரப்படும். புதுச்சேரியில் அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்” என்றார்.

இதையும் படிங்க: தீரன் சின்னமலை நினைவு தினம் - முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.