டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. வரும் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் பல்வேறு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இன்றைய(டிச.12) மக்களவை அமர்வில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களை(plastic லைட்டர்) தடை செய்து, தீப்பெட்டி உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டார்.
கடந்த 8ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: உலகம் ஆயுர்வேதத்திற்குத் திரும்புகிறது: பிரதமர் மோடி