இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காட்சிப்பதிவில், ” மத்திய பாஜக அரசு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றிய 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் அப்போராட்டம் வலுப்பெற்று ஏழு நாட்களை கடந்துள்ளது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் மத்திய அரசு அவர்களை வஞ்சிக்கிறது. விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய அரசு எந்த நிபந்தனையும் இன்றி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும்.
புதுச்சேரியில் கரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், தற்போது தான் சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். ஆகவே, மதுவின் மீது போடப்பட்ட கரோனா வரியை ரத்து செய்து அமைச்சரவை எடுத்த முடிவுக்கு எதிராக ஆளுநர் வரியை நீட்டித்திருப்பது ஏதேச்சதிகார செயல். மது விற்பனை குறைந்ததால் மாநிலத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநில வளர்ச்சிக்கு எதிராக ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார்.
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணித்து தமிழ் மொழியை தனிமைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது “ எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம்; பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ!