ETV Bharat / bharat

சிசோடியோ ராஜினாமா எதிரொலி: டெல்லியில் புதிய அமைச்சர்களாகும் அதிஷி, சவுரப் பரத்வாஜ் - வீடு வீடாக ஆம் ஆத்மி பரப்புரை செய்ய முடிவு

மணீஷ் சிசோடியோ, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் கைது தொடர்பான பின்னணி குறித்து, மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. மேலும், அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க ஆம் ஆத்மி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை
அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை
author img

By

Published : Mar 1, 2023, 10:37 PM IST

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து அவர் 5 நாள் சிபிஐ காவலில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே வழக்கு ஒன்றில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கைதான இருவரும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் டெல்லியில் இன்று (மார்ச் 1) முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியின் வருங்கால திட்டங்கள் குறித்து விவாதித்தார். மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினும், கல்வி அமைச்சராக இருந்த சிசோடியாவும் சிறப்பாக செயல்பட்டனர். அதை பிரதமர் மோடி விரும்பவில்லை. இருவரையும் கைது செய்தால் டெல்லி அரசு முடங்கிவிடும் என பிரதமர் எண்ணினார். ஆனால் அந்த எண்ணம் தவறானது. ஆம் ஆத்மி புயல் போன்றது. அதை யாரும் முடக்க முடியாது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, எல்லை மீறி செயல்பட்டார். அதைத் தான் தற்போது பிரதமர் மோடியும் செய்கிறார். எல்லை மீறும்போது இயற்கையும் அதன் வேலையை செய்கிறது. மார்ச் 5-ம் தேதி முதல் ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் இருக்கும் உண்மையை எடுத்துரைக்க உள்ளோம். இதுபோன்ற கைது நடவடிக்கையை கண்டு, ஆம் ஆத்மி அஞ்சாது. ஒருவேளை சிசோடியா மற்றும் ஜெயின் ஆகியோர் பாஜகவில் இணைந்தால் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்" என கூறினார்.

புதிய அமைச்சர்கள்: தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், "அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் மாநில அமைச்சர்களாக நியமிக்க, துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிரான தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 3-ல் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.